பாஸ் போர்ட் அலுவலகத்தின் முன் மோசடி செய்த 6 பேர் வசமாக மாட்டினர்!

வவுனியா வவுனியா கடவுச்சீட்டு  அலுவலகம் முன்பாக பல்வேறு  மோசடிகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில்  6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக டோக்கன் வழங்குதல் தவறான முறையில் முன்னுரிமை பெறுதல் கடவுச்சீட்டு பெறுதல்  இடம்பெறுவதாகவும் பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறி வருவதாகவும் , குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய செயல்பட்ட தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக சோதனையில் ஈடுபட்டதுடன் மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள் என சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ,கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றால் தனது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான 0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

Related Posts