பாவனைக்குதவாத மாட்டிறைச்சி மீட்பு

யாழ்ப்பாணம் பிரதான மாட்டிறைச்சி கடைத்தொகுதியில் மனித பாவனைக்குதவாத நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கழிவு இறைச்சிகளை யாழ்ப்பாண மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

நேற்றய தினம் யாழ்.மாநகர சபையின் பொது சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பட்ட தகவலொன்றினையடுத்து விஷேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கடையொன்றின் களஞ்சியறையில் குளிர்சாதன பெட்டியொன்றில் இருந்தே இந்த இறைச்சி தொகை கைப்பற்றப்பட்டிருந்தது.

இதன்படி கைப்பற்றப்பட்ட கழிவு இறைச்சிகளின் மொத்த நிறை சுமார் 200 கிலோ கிராம் வரை இருக்கலாம் என பொது சுகாதார பரிசோதக அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

குறித்த விடயம் தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் தெரிவிக்கையில், மாட்டிறைச்சிகள் அன்றாடம் வெட்டி விற்பதற்கே சுகாதார பிரிவால் அனுமதி வழங்கப்படுகின்றது.

இதன்போது அன்றைய தினம் மீதமாகும் இறைச்சிகளை உரிய சுகாதார முறையில் பாதுகாக்கப்பட்டு பின்னர் மறுநாள் மீண்டும் சுகாதார பரிசோதகரிடம் காண்பித்து அவரால் மீண்டும் அனுமதி வழங்கப்பட்ட பின்னரே அன்றைய தினம் இறைச்சியை விற்பனை செய்ய முடியும்.

ஆனால் இங்கு இறைச்சிகள் அவ்விதமாக எதுவிதமான சுகாதார பிரிவினரது அனுமதியையும் பெற்றுக்கொள்ளப்படாதுடன் இறைச்சிகள் அனைத்தும் மனித பாவனைக்கு உதவாத நிலையிலேயே இருந்துள்ளது.

Related Posts