பாவனாவுக்கு அடுத்த மாதம் திருமணம்!

தமிழில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானவர் பாவனா. அதன்பிறகு ஜெயங்கொண்டான், அசல் உள்பட பல படங்களில் நடித்தவருக்கு சமீபகாலமாக தமிழில் படங்கள் இல்லை. அதனால் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாவனாவின் முன்னாள் கார் டிரைவரும், அவரது கூட்டாளிகளம் சேர்ந்து பாவனாவை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்தனர்.அதையடுத்து, கேரளா போலீசில் புகார் அளிக்கப்பட்டு குற்றவாளிகள் கைதாகி வருகின்றனர். சிலரை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகுதான் சினிமாவில் மீண் டும் நடிப்பேன் என்று பாவனா கூறியுள்ளார். மேலும், அவரை திருமணம் செய்து கொள்ளயிருந்த அவரது வருங்கால கணவர், இந்த சம்பவத்துக்குப்பிற கும் பாவனாவுக்கு உறுதுணையாக இருந்து வருகிறாராம். அதனால், அடுத்த மாதம் உறுதி செய்யப்பட்டிருந்த பாவனாவின் திருமணத்தை அதே தேதியில் நடத்த பாவனாவின் பெற்றோர் முடிவு செய்துள்ளார்களாம்.

Related Posts