பால் மாவின் விலை உயர்வடையக் கூடிய சாத்தியம்?

பால் மாவின் விலை உயர்வடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வரிச் சலுகை வழங்கப்படாவிட்டால் பால் மாவின் விலைகளை உயர்த்த நேரிடும் என பால் மா இறக்குமதியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரிச் சலுகை உரிய முறையில் வழங்கப்படாவிட்டால் 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலையை 75 ரூபாவினால் உயர்த்த நேரிடும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது 400 கிராம் எடையுடைய பால் மா 325 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு கிலோ கிராம் எடையுடைய பால் மா இறக்குமதிக்கான வரி 135 ரூபாவிலிருந்து 225 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் விலை உயர்வடையக் காரணமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

விலை உயர்வடைந்தால் நுகர்வோர் பாதிக்கப்படக் கூடும் என்பதனால் இறக்குமதி வரியை குறைக்குமாறு நிதி அமைச்சிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் அந்தக் கோரிக்கைக்கு நிதி அமைச்சு செவி சாய்க்கவில்லை என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் பால் மாவின் விலையை உயர்த்த நேரிடும் என சங்கம் தெரிவித்துள்ளது.

விலை உயர்த்துவதற்கு அனுமதியளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Related Posts