பால் மாவின் விலை அடுத்து வாரம் மீண்டும் அதிகரிக்கும்!!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்து வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுமென பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த , குறித்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பால்மாவின் கையிருப்பு குறைவடைந்துள்ளதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பால் மா அடுத்த வாரம் கிடைக்கப்பெறுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உரிய விலை திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு பால் மா கையிருப்பு கிடைக்கப்பெற்றதும் விலைகள் அறிவிக்கப்படுமெனவும் பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பொதி 790 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் பால் மா ஆயிரத்து 945 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts