பால்மா விலை அதிகரிப்பு கோரிக்கை நிராகரிப்பு

பால்மா விலையை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர் சங்கம் விடுத்த கோரிக்கையை நுகர்வோர் அதிகார சபை நிராகரித்துள்ளது.

பால்மா கிலோகிராம் ஒன்றின் விலையை 810 ரூபாயிலிருந்து 927 ரூபாய் வரை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர் சங்கம், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கைக்கு அமைய, 325 ரூபாய்க்கு விற்கப்படும் 400 கிராம் பால்மா, 375 ரூபாயாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும், அரசாங்கத்தினால், அத்தியாவசிய பொருட்களுக்காக விசேட மானியம் வழங்கப்பட்ட நிலையில் பால்மாவுக்கும் மானியம் வழங்கப்பட்டுள்ளதால் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

2016.07.14 திகதி இலக்கம் 1975/68, இலக்கம் 38ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் படி, பால்மா ஒரு கிலோகிராமின் அதிகூடிய சில்லறை விலை 810 ரூபாய் ஆகும். 400 கிராம் பால்மா பக்கெற்றின் விலை 325 ரூபாய் ஆகும்.

Related Posts