பால்மாவிற்கான புதிய விலை, மே மாதம் 5ஆம் திகதி முதல் உற்பத்திசெய்யப்படும் பால்மாவிற்கே பொருந்தும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
ஆனால், கையிருப்பிலுள்ள பால்மாவை புதிய விலைக்கு விற்பனை செய்வோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மா விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய 400 கிராம் நிறையுடைய பால்மாவின் விலை இருபது ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை ஐம்பது ரூபாவாலும் அதிகரிப்பட்டுள்ளது.
எனினும், இந்த விலை அதிகரிப்பானது குழந்தைகளின் பால்மாவின் விலையில் தாக்கத்தை செலுத்தாது என வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த காலங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் வீழ்ச்சியே பால் மா விலையை அதிகரிப்பதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.