பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளின் விலை அதிகரிப்புக்கு நுகர்வோர் சேவைகள் அதிகார சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனைடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 60 ரூபாயாலும் 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை உப குழுவால் முன்வைப்பட்டு அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளுக்கான விலைச் சூத்திரத்தின் அடிப்படையிலேயே இந்த விலை அதிகரிப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts