பால்நிலைக் கல்வியில் மாணவர்கள் நாட்டம் – வடமாகாண கல்வி அமைச்சர்

Sex-Education“பாடசாலை மாணவர்கள் பால் நிலைக் கல்வியைப் பெறுவதற்கு ஆர்வமுடையவர்களாக உள்ளனர். அவர்களது பெற்றோரும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உள்ளனர்’‘ என்று தெரிவித்துள்ளார் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா.

வடமாகாண கல்வி ஆலோசனைச்செயலமர்வின் இரண்டாம் நாள் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறும் போது,

”மாணவர்கள் பால் நிலைக் கல்வியை விரும்புகிறார்கள். அதனை 14 வயதில் கற்க வேண்டும் என்று கூறுகிறார்கள். மாணவர்களின் அந்தக் கருத்தை அவர்களது பெற்றோரும் வரவேற்கிறார்கள். மாணவர்களுக்கு அடிக்கவேண்டாம் என்று ஒருசாரார் வலியுறுத்தி வருகின்றனர். மற்றொரு சாரார் மாணவர்களுக்கு அவ்வாறு தடியால் அடித்தேனும் படிப்பிப் பதனையே விரும்புகின்றனர்”- என்று தெரிவித்தார்.

நேற்றைய ஆய்வின் பின்னர் மாணவரொருவர் உரையாற்றுகையில் ”இந்தத் திட்டங்களை மாணவர்களாகிய நாங்கள் வரவேற்கிறோம். இவை விரைவில் நடைமுறைக்கு வந்தால் மாணவர்களாகிய எமக்குப் பயனளிக்கும். தாமதமாக வந்தாலும் எமக்குப் பிறகு வருபவர்களுக்குப் பயனளிக்கும். எது நடக்கிறதோ அதுநன்றாகவே நடக்கும்….” என்று கீதையின் ஆரம்பப் பகுதியை எடுத்துக் கூறிவிட்டு அமர்ந்தார்.

தொடர்புடைய செய்தி

தகுதியற்ற எவரையும் ஆசிரியர் பதவிக்கு நியமிக்க முடியாது – கல்வி அமைச்சர்

தகைமையற்ற தறுதலைகளை ஆசிரியர்களாக்குவதைக் தவிர்ப்போமாக – முதலமைச்சர்

Related Posts