பாலியல் லேகியம் சாப்பிட்ட யாழ். மாணவர்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்தரவகுப்பு பாடசாலை ஒன்றில் மாணவர்களும் மாணவிகளுமாகச் சேர்ந்து பாலியல் லேகியம் சாப்பிட்டுள்ளனர்.

இதன் பின்னர் அவர்கள் போதை ஏறி தமக்குள் சண்டையிட்டதன் காரணமாக 4 மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் குறித்த மாணவர்கள் சீருடையுடனேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை வைத்தியசாலையில் ஆசிரியர் ஒருவரே அனுமதித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் இனிப்புப் பொருள் போன்ற ஒன்றைச் சாப்பிட்ட பின்னரே இவ்வாறு நடந்து கொண்டதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

லேகியம் சாப்பிட்டு குழப்பம் விளைவித்த மாணவிகளை பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரியவருகின்றது. இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts