பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் பாடசாலைக் காவலாளி கைது

arrest_1பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலைக் காவலாளியொருவரை இன்று வியாழக்கிழமை காலை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் காவலாளியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார். இவர் இம்மாணவியை நேற்று புதன்கிழமை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் இம்மாணவி பெற்றோருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து பெற்றோர் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன், யாழ். பொலிஸ் நிலையத்திலும் இன்று வியாழக்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளனர்.

Related Posts