பாலா படத்தில் நடிக்கத் தயங்கும் முன்னணி ஹீரோக்கள் ?

தமிழ்த் திரையுலகில் கமர்ஷியலாகப் பெரிய வெற்றிப் படங்களை அளிக்கவில்லை என்றாலும் இயக்குனர் பாலாவை, சிறந்த இயக்குனராக திரையுலகமும், ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற இயக்குனர்களிடமிருந்து தனித்துத் தெரியும் வகையில் படங்களைக் கொடுப்பவர் இயக்குனர் பாலா. விக்ரம், சூர்யா, ஆர்யா ஆகியோருக்குப் பெரிய திருப்புமுனைகளைக் கொடுத்து அவர்களை இன்று பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்களாக உயரக் காரணமாக இருந்தவர் பாலா மட்டுமே.

bala

விக்ரமிற்கு ‘சேது’, சூர்யாவிற்கு ‘நந்தா’, ஆர்யாவிற்கு ‘நான் கடவுள்’ என அவர்களுக்குள் ஒளிந்திருந்த நடிகர்களை வெளிக் கொணர காரணமாக இருந்தார். விஷாலுக்கு ‘அவன் இவன்’ மூலம் நல்ல நடிகர் என்ற திருப்புமுனையையும், அதர்வாவிற்கு ‘பரதேசி’ மூலம் தனி அடையாளத்தையும் வழங்கியவர்.

‘குற்றப் பத்திரிகை’ படத்தை பாலா இயக்கப் போவதாகவும் அதில் அவருடைய அபிமான ஹீரோக்கள் நடிக்கப் போவதாகவும் ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், அந்தப் படத்திலிருந்து பாலா தற்போதைக்குப் பின் வாங்கிவிட்டார். அவர் அடுத்து இயக்கப் போகும் படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கப் போகிறார். பிரகதி நாயகியாக நடிக்கப் போகிறார். யுவன் யார் என்று பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். அவர் இதற்கு முன் “கமரகட்டு, காதலைத் தவிர வேறொன்றுமில்லை, கீரிப்புள்ள” ஆகிய படங்களில் நடித்துள்ள சிறிய ஹீரோதான். அதைவிட அவர் சாட்டை படத்தில் நடித்தவர் என்று சொன்னால் ஓரளவிற்கு தெரியும்.

பாலா அவரை நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளது கோலிவுட்டில் மிகப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் வளர்த்து விட்ட முன்னணி ஹீரோக்கள் யாரும் தன் படத்தில் நடிக்க சம்மதிக்கவில்லை என்ற கோபத்தில்தான் பாலா இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

Related Posts