பாலா படத்தில் நடிகையாகும் பாடகி பிரகதி!

வளர்ந்து வரும் பின்னணி பாடகி பிரகதி குருபிரசாத். சிங்கப்பூரில் பிறந்த இவர் இப்போது வசிப்பது கலிபோர்னியாவில். சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று பாடகியானார்.

bala-pirakathy

பரதேசி படத்தில் அவரை பாடகியாக அறிமுகப்படுத்தினார் பாலா. செங்காடே, ஒர் மிருகம் பாடல்களை பாடினார். அதன் பிறகு ஒசாக்கா என்ற பாடலை வணக்கம் சென்னை படத்தில் பாடினார். இதுதவிர தனி ஆல்பங்களில் பாடி வருகிறார்.

தற்போது பிரகதி நடிகையாகிறார். பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் நாதஸ்வர கலைஞராக வரும் சசிகுமாரின் தங்கை ஒரு நாட்டுப்புற பாடகி.

அந்த கேரக்டருக்கு பாலா பிரகதியை தேர்வு செய்துள்ளார். தற்போது பிரகதி நடிப்பு பயிற்சியும், நடிக்க போகும் கேரக்டருக்கான ஒத்திகையும் செய்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு பாடகி நடிகையாகி இருக்கிறார்.

Related Posts