பார்த்திபனின் பிரம்மாண்ட திட்டம்!

வித்தியாசத்துக்கு பெயர் போனவர் நம்ம பார்த்திபன். அவர் இயக்கி வரும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் பல புதுமுகங்களும் மற்றும் முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர் என்பது நமக்கு தெரிந்த செய்தி .

paarththeepan
ஆனால் தற்போது கூடுதல் சிறப்பு அம்சமாக ஒரு பாடல் காட்சியை எடுத்து வருகிறார் பார்த்திபன். “சோகம் போதும் நிப்பாட்டிடு, சொர்க்கம் போக டிக்கெட் எடு…” என தொடங்கும் இந்த பாடல் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதத்தில் இருக்குமாம்.

தமன் இசையில் மதன் கார்க்கி எழுதியுள்ள இப்பாடலை ஹரிசரன், வெங்கட்பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, நகுல் பாடியிருக்கிறார்கள்.

இந்த பாட்டில் முன்னணி நட்சத்திரங்களையெல்லாம் ஆட வைக்கலாம் என்று சில பெயரை அணுகி அவர்களிடம் சம்மதமும் பெற்று விட்டார் இருந்தாலும் அவர் மனதில் இருக்கும் சில நடிகர்களின் சம்மதம் இன்னும் கிடைத்த பாடு இல்லை, அதற்காக கிடைத்த வரை அந்த நடிகர்களை ஆட வைத்து கொண்டு இருக்கிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடனம் அமைக்கும் இப்பாடலுக்கு பத்து ஹீரோக்களை ஆட வைப்பது பார்த்திபனின் திட்டமாம்.

Related Posts