பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நான்கு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் 7 இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 158 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் கிழக்குப்பகுதியில் பட்டாச்சான் என்ற சினிமா ஹால் உள்ளது . இங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் திடீரென சரமாரியாக சுட்டான். பலர் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர்பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பின்னர் 158 ஆக பலி எண்ணிக்கை அதிகரித்தது.மேலும் 100 பேர் பிணைக்கைதிகளாக சிக்கியுள்ளனர்.
இந்தசம்பவம் நடந்த அதே நேரத்தில் மத்திய பாரீஸ் நகரில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
பின்னர் வடக்கு பாரீஸ் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் என 7 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 158பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பயங்கரவாத தாக்குதல் என கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த சம்பவம் பிரானஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாரீஸ்நகரில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.
இந்நிலையில் அங்கு 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்ததையடுத்து பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே அமைச்சரவை கூட்டத்தைகூட்டி ஆலோசனை நடத்தினார். பிரான்ஸ் தலைநகரில் அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்ததையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்ய உத்தரவு பிறப்பித்தார் அதிபர் ஹோலாண்டே. மக்கள் தங்களது வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் எல்லைகள் அனைத்தையும் மூடவும் அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.