பாரிஸின் புற நகர துணை முதல்வராக யாழ் யுவதி!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புற நகரில் அமைந்து உள்ள கார்ஜ் லி கொணெஸ் மாநகரத்தின் பிரதி மேயராக ஈழ தமிழ் யுவதி சேர்ஜியா மகேந்திரன் தெரிவாகி உள்ளார்.

france-tamil-girl

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தேர்தலில் பிரான்ஸின் முக்கிய வலதுசாரி கட்சியான யூ. எம். பியில் போட்டியிட்ட இவர் மகத்தான வெற்றியை பெற்றார்.

இங்கு ஈழ தமிழர்கள் அடங்கலாக ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் செறிந்து வாழ்கின்றமையால் இவரின் வெற்றி உறுதியாகவே இருந்தது.

மாநகர சபையில் சட்டம், திருமண விவகாரம், ஆவண பாதுகாப்பு போன்ற முக்கிய விடயங்கள் இவரின் பொறுப்பில் உள்ளன.

இவர் யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறையை சேர்ந்த செல்லப்பா மகேந்திரன் – தேவி தம்பதியின் புதல்வி ஆவார். இவர் சட்டத் துறையில் பட்டப் படிப்பு பயின்றவர். சிறிய வயது முதலே சமூக சேவைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.

Related Posts