பாரிய கடல் கொந்தளிப்பு : மட்டக்களப்பு மீனவர்கள் அவதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாள பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இம்மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி பிரதேசங்களான புதிய காத்ததன்குடி, ஏத்துக்கால், பாலமுனை, நாவலடி உட்பட பல இடங்களிலுள்ள கடலில் பாரியளவிலான கொந்தளிப்பு காணப்படுகின்றது. மேலும், இம்மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் தொடர் அடைமழை பெய்து வருகின்றது.

Related Posts