பாராளுமன்றம் கலைப்பு!! பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி!!

பாராளுமன்றத்தை கலைக்கும் உத்தரவுடனான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று (24) நள்ளிரவுடன் 9ஆவது பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடாத்துவதற்கும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 04 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரை, இதற்கான வேட்புமனுக்களை பெறுவதற்கான திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய பாராளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கூட்டுவதற்கும் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் வேளையில், தாம் ஜனாதிபதியாக பதவியேற்றதும் உடனடியாக பாராளுமன்றத்தை கலைப்பதாக, அநுர குமார திஸாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுப்பதாகவும், அதில் 150 பேரை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தனது தேர்தல் பரப்புரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்த்ககது.

Related Posts