பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா!

பாராளுமன்ற கேட்போர்கூடத்தில் இன்றுகாலை (25) 10.00 மணிக்கு நவராத்திரி விழா கொண்டாடப்படவுள்ளது.

srilankan-parliment

காலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இந்நவராத்திரி விழா கொண்டாடப்படவுள்ளது.

புரட்டாதி மாதம் பிரதமை திதியில் ஆரம்பமாகும் இந்த விரதம் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

நவராத்திரி விரதத்தின் முதல் மூன்று நாட்களும், துர்க்கா தேவியை குறித்தும் அடுத்த மூன்று நாட்களும் லக்ஷ்மி தேவியை குறித்தும் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த விரதத்தின் கடைசி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாட்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

Related Posts