பாராளுமன்றத்தில் சம்பந்தனுக்கு அடுத்த ஆசனத்தில் அமரப் போகிறார் மஹிந்த!

பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் ஆசனங்கள் ஒழுங்குகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

sambanthan-mahintha

சபாநாயகர் கரு ஜெயசூரியவுடன் இடம்பெற்ற பேச்சுகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 6 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு முன்வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கூட்டணி கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்களுக்கும் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமர்வார்.

அதேநேரம் விமல் விரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் தினேஸ் குணவர்தன ஆகியோருக்கும் முன்வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் தெரிவான 95 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 59 பேர் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 36 பேர் தேசிய அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுள்ளனர்.

இதன்படி. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 46 நாடாளுமன்ற உறுப்பினர்களும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஜே.வி.பியின் 6 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்வார்கள். நாடாளுமன்றத்தில் இரண்டு பக்கங்களிலும் 116 ஆசனங்கள் உள்ளன.

ஆளும் கட்சியின் தரப்பில் எஞ்சியுள்ளவர்களுக்கு எதிர்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களில் பின்வரிசை வழங்கப்படும். இதில் முக்கிய விடயம் என்னவென்றால் உதய கம்மன்பிலவுக்கு முன்வரிசை ஆசனம் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts