பாரதிராஜா ஒரு குரங்கு, அவர் நடிகரே இல்லை: பார்த்திபன்

பாரதிராஜா அவர்களை பாராட்ட நமக்கு வாழ்நாளே பத்தாது. நான் கொஞ்சம் வித்தியாசமாக அவரை பாராட்ட நினைக்கிறேன். பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் குரங்கு பொம்மை. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பாரதிராஜா பற்றி பேசியதாவது,

பாரதிராஜா அவர்களை பாராட்ட நமக்கு வாழ்நாளே பத்தாது. நான் கொஞ்சம் வித்தியாசமாக அவரை பாராட்ட நினைக்கிறேன். பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு

குரங்கு என்றால் ஒரு வார்த்தை ஆனால் நான்கு எழுத்து உள்ளது. சிறந்த ‘கு’ணவான், சிறந்த ‘ர’சனையாளர், இ’ங்’கிதம் அறிந்தவர், ‘கு’வாலிட்டியான ஒரு மனிதர்.

எனக்கு தெரிந்து பாரதிராஜா ஒரு நல்ல மனிதரே தவிற நல்ல நடிகரே இல்லை. பாராதிராஜா நடிக்கும் என்று போட்டால் அவர் நடிச்சிட மாட்டார். நான் இந்த படத்தில் நான்கு, ஐந்து காட்சிகள் பார்த்தேன். நடிக்கவே இல்லை அவ்வளவு சிறப்பாக அப்படியே வாழ்ந்திருக்கிறார்.

அவருடைய மிக சிறப்பான ஒரு விஷயம் அவர் நடிப்பு சொல்லிக் கொடுப்பாரே தவிர அவர் நடிக்கவே மாட்டார். நான் சொல்வது சினிமாவில் மட்டும் அல்ல. நிஜ வாழ்க்கையிலும், மேடையிலும் எங்கேயுமே நடிக்கத் தெரியாத அப்ராணி மனிதர் அவர். அதனால் தான் நிறைய இடத்தில் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும்.

பாரதிராஜாவை நாம் பாராட்டுவது ரொம்ப, ரொம்ப முக்கியான விஷயம். இந்த படம் எல்லாம் 20, 30 வருஷத்திற்கு பிறகு பெரிய பதிவாகிவிடும். நாம் எப்பொழுதுமே இருக்கும்போது யாரையும் பெரிதாக பாராட்டுவது இல்லை, வாழ்த்துவது இல்லை.

தமிழ் திரையுலகின் சார்பாக பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நாம் எடுத்தே தீர வேண்டும். அந்த ராமாயணத்தில் நானும் ஒரு அணிலாக இருக்க ஆசைப்படுகிறேன். அது விரைவில் நடக்கும் என்றார் பார்த்திபன்.

Related Posts