பாப்பரசர் வருகைக்காக விசேட பஸ் சேவை

புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் இலங்கைக்கான விஜயத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (13) முதல் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்திலுள்ள அனைத்து சாலைகளிலிருந்தும் மடுவுக்கு செல்லும் பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸர் திங்கட்கிழமை (12) தெரிவித்தார்.

pop-papprasar

இலங்கைக்கு செவ்வாய்க்கிழமை (13) வருகை தரும் புனித பாப்பரசர் பிரான்ஸிஸ், புதன்கிழமை (14) மன்னார் மடு தேவாலயத்தில் நடைபெறும் விசேட ஆராதனைகளில் கலந்துகொள்ளவுள்ளார். இதன்பொருட்டே இந்த பஸ் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அஸர் மேலும் தெரிவித்தார்.

Related Posts