2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற பாப்பரசர் பிரான்சிஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரோமில் சந்தித்து இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை கையளித்தார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் பாப்பரசர், ஜனவரி மாதம் 14ஆம் திகதி காலி முகத்திடலில் காலை 8.30க்கும் அன்று பிற்பகல் 2.00 மணிக்கு, மடுமாதா தேவாலயத்திலும் திருப்பலி ஒப்புக்கொடுப்பார் என்று கொழும்பு பேராயர் இல்லத்தினால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.