பாப்பரசரின் இலங்கை வருகையை ஞாபகப்படுத்தும் வகையில் ஞாபகார்த்த முத்திரை வெளியிடல் தொடர்பில் முத்திரை வெளியீட்டுத்திணைக்களம் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.
தபால் திணைக்களம் மற்றும் முத்திரை காரியாலயம் இணைந்து ‘பாப்பரசரின் இலங்கை வருகை’ என்ற தொனிப்பொருளின் வெளியிடப்படவுள்ள போதிலும் அதன் தயாரிப்பு தொடர்பில் இன்னும் பிரசித்தப்படவில்லையென்று முத்திரை வெளியீட்டுக் காரியாலயம் தெரிவித்துள்ளது.
போலியாக செய்யப்பட்ட முத்திரை காட்சிப்படுத்தப்படாது என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ள முத்திரை வெளியீட்டு காரியாலயம் வெளியிடப்படும் மற்றும் வேறு உரிமையுடன் உள்ளவைகளை மட்டுமே காட்சிப்படுத்தப்படுத்துமாறும் விற்பனை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவ்வாறான செயற்பாடுகளுக்கான அனுமதி வழங்குதல் சட்டவிரோதச் செயல் என்றும் முத்திரை வெளியீட்டுக் காரியாலயம் சுட்டிக்காட்டியுள்ளது.