பாத்தீனியம் கிலோ 10 ரூபாவுக்கு வாங்கப்படும் என் அறிவித்து விவசாய நிலங்களில் வளரும் நச்சுத்தன்மை வாய்ந்த பாத்தீனிய செடிகளை அழிக்கும் முயற்சியில் வடமாகாணசபை விவசாய அமைச்சு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலம் மக்களைக்கொண்டே பாத்தீனியத்தினை அழிக்கும் உத்தியினை விவசாய அமைச்சு மேற்கொண்டிருக்கின்றது. பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் அழிப்பு நடவடிக்கைககளின் தொடர்சியாக அந்த வித்தியாசமான அறிவிப்பினை அமைச்சு வெளியிட்டிருப்பது பலத்த வரவேற்பினை பெற்றிருக்கின்றது. மேலும் வாங்கப்படும் பாத்தீனியம் பரிசோதிக்கப்பட்டே வாங்கப்படும் எனவும் வேறு களைகளுடன் கலந்து தம்மிடம் விற்பனை செய்யமுடியாதெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொள்வனவு செயப்படும் பாத்தீனியம் எடனுக்குடன் அழிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.ஒப்படைக்கப்படும் பாத்தீனியங்கள் அடங்கிய பைகளுக்கு பதிலாக புதிய பைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது