நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்க நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தில் நேற்ற (புதன்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் முதலான சமூக வலைதளங்களை அணுகுவதற்கான வசதிகள் தற்காலிகமான முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.
அனைத்து சமூக ஊடகங்களும் முழுமையாக முடக்கப்படவில்லை பொது மக்களின் நலன்கருதியே அரசாங்கம் செயல்பட்டுவருகிறது என்றும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.