இலங்கையின் உள்நாட்டுத் தீவிரவாதத்தை இந்தியா ஊக்குவித்ததாக இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தீவிரவாதத்தை இந்தியா தான் தூண்டிவிட்டது என்று கேட்டாபாய ராஜபக்ஷ கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
உலகத்தில் எந்தப் பகுதியில் தமிழர்கள் இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
அதனை மத்திய அரசு எப்போதுமே சிறப்பாக செய்து வருகிறது. ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்த போது கூட ஈழத் தமிழர்கள் நலனுக்காக அமைதிப்படையை அனுப்பினார் என அவர் சுட்டிக்காட்டியதுடன்,
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது இதற்காக, கடற்பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.