பாதுகாப்பு செயலரின் படத்துடன் தேர்தல் சுவரொட்டிகள்

notes-electionநடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்தரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சிலர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் படத்தினை இணைத்து தங்களது சுவரொட்டிகளை இணைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதியில் இந்த தேர்தல் பிரசார விளம்பரத்தில் ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் புகைப்படத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் படத்தினையும் இணைத்து பிரசார நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விபரங்கள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே வெளியிடப்படும் என்று சுதந்திரக் கட்சி அறிவித்துள்ள நிலையில் தற்போது யாழ்.நகரத்தில் சில வேட்பாளர்கள் தங்கள் விளம்பரப் பதாதைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts