பாதுகாப்பு அமைச்சின் செயலர் கிளிநொச்சிக்கு விஜயம்!

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ன இன்று (17-04-2020) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவருடன் விமானப்படைத் தளபதியும் வருகைதந்திருந்தார்.

இன்று காலை பலாலி விமான நிலையத்திற்கு விசேட விமானம் மூலம் விஜயம் சென்ற இவர்கள் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் கிளிநொச்சி இரணைமடு நெலும் பியச மண்டபத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் முப்படையினர் ,பொலிஸார் ஆகியோர் அா்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதாகவும், அவர்கள் தங்களின் விடுமுறையை கூட பெற்றுக்கொள்ளாது, தமிழ் சிங்கள புதுவருடத்திற்கு கூட செல்லாது கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்போடு பணியிலிடுப்படுவதாகவும் தெரிவித்த அவர் அதற்காக அவர்களுக்கு விசேடமாக நன்றி தெரிவிப்பதோடு, கள நிலைமைகளை ஆராயவும் இந்த விஜயத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட படைகளின் தளபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளாருக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் வெற்றி நினைவு தூபியின் மாதிரி நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

Related Posts