Ad Widget

பாதுகாப்புச் அமைச்சின் செயலாளரினதும் மீள்குடியேற்ற அமைச்சரினதும் கருத்துக்கும் அங்கஜன் எதிர்ப்பு!

பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் கருணாசேனா ஹெட்டியாராச்சி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் அபிவிருத்தியை மட்டும் நோக்காகக் கொண்டு பலாலி விமானத் தளம் விஸ்தரிப்புப் பற்றிக் கூறுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் எதிர்ப்பு மற்றும் தடைகளையும் மீறி, பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் வடக்கின் உட்கட்டுமான விருத்தியில் பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சரும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

‘இருவரும் அபிவிருத்தியை மட்டுமே பார்க்கின்றனர். மக்களின் பிரச்சினை, தேவை இதனால் ஏற்படும் நஸ்டம் என்பவை குறித்து, மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்குத் தான் தெரியும். மீள்குடியேற்றத்தின் பின்னரே விஸ்தரிப்பு பற்றி கலந்துரையாட வேண்டும் என சமூகத்தின் முடிவாக சொல்லப்பட்டதே தவிர, முதலமைச்சரின் தனிப்பட்ட முடிவல்ல.

இது தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் கதைப்போம். கட்சி பேதமின்றி செயற்பட்டு, இது தொடர்பில் மக்கள் நலன்சார்ந்த தீர்வைப் பெறுவோம்’ என்றார்.

Related Posts