பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கச்சென்றவர்களுக்கு இடையூறு விளைவித்த பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சி கண்டாவளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து அரச வாகனத்தை தடுத்து நிறுத்தி அசௌகரியம் விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சேவைகளை வழங்கும் பொருட்டு கண்டாவளை மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உதவிப்பொருட்களை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச உத்தியோகத்தர்களை பிரதேச சபைஉறுப்பினர் உள்ளிட்ட நான்கு பேர் தகாதவாரத்தைப்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதுடன்,அவர்களது பணிகளுக்கு இடையூறு விளைவித்து அவர்கள் பயணித்த இரண்டு வாகனங்களையம் தடுத்து நிறுத்தினர்.

இது தொட்ரபில் கடந்த திங்கள் கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைபபாடு செய்யப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சம்பமவ இடத்திற்குச்சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புபட்ட கரைச்சிப்பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டஇரண்டு பேரை கைது செய்து நேற்று (26-12-2018) கிளிநொச்சி மாவட்ட நீதிவான நிதிமன்றில் ஆயர்படுத்தியிருந்தனர்.

B 1747 / 18 என்ற வழக்கின் பிரகாரம் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி விளக்கமறியலில வைக்குமாறு கிளிநொச்சி மாவடட நீதிவான நீதிமன்றம உத்தரவிட்டுள்ளது

Related Posts