யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சுக்கே வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட நாவலர் கோட்டம் மாதிரிக் கிராமம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எம்.ஏ சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதகதியில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.