பாதாள உலகக்கோஷ்டி தலைவரின் இறுதி அஞ்சலிக்கு மலர்தூவிய கெலி!

பிரபல பாதாள உலகத் தலைவர் ஒருவரின் இறுதிக்கிரியையின்போது உலங்குவானூர்தி யிலிருந்து மலர்கள் தூவப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் குறித்த பாதாள உலகக் குழுத் தலைவரின் உடல் இரத்மனாலையிலிருந்து மயானத்துக்கு எடுத்துச்செல்கையில் உலங்குவானூர்தியிலிருந்து பூக்கள் தூவப்பட்டுக்கொண்டிருந்தது.

அண்மையில் இனந்தெரியாத நபர்களினால் மஹர நீதிமன்றத்துக்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரும் பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவருமான சுதேஸ் அசாங்க எனப்படும் லன்சியாவுக்கே தனியார் உலங்குவானூர்திமூலம் மலர் தூவப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து மயானம் வரையான சந்திகளில் உலங்குவானூர்தியால் பூக்கள் தூவப்பட்டதுடன், வீட்டிலிருந்து மயானம் வரை அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related Posts