மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கெதிராக சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டு இன்று 3ஆம் நாள் பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ள நிலையில் மகிந்த அணியினரால் பாதயாத்திரைக்கு முன்னால் தாங்கிவரும் பதாகையில் தமிழ் பிழையாக அச்சிடப்பட்டுள்ளது.
இன்றுடன் மூன்றாவது நாள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பிழையைத் திருத்துவதற்கு அவர்களால் எந்தவொரு நடவக்கையும் எடுக்காதது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் மகிந்த அணியினரின் இச்செயற்பாடானது தமிழ் மொழியைக் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த பதாகையில் ‘பாதயாத்திரை’ என்பது ‘பாதயாத்திர’ என பிழையாக எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வல்கள், தமிழ் மொழி குறித்து பொருட்படுத்தாமையே இதற்கான காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த பாதயாத்திரையில் சிறீலங்காவின் முன்னாள் அதிபரும் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.