அரிசிக்கான நுகர்வை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாகவே அண்மையில் பாணுக்கான விலை அதிகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றினை அடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.