பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிப்பு!!

450 கிராம் எடையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்றைய தினம் முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 17 ரூபாயினால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் வெதுப்பக உற்பத்திப் பொருள்களின் விலையையும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts