பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மற்றும் உணவுப் பொதியின் விலைகளும் அதிகரிப்பு

பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

அதற்கமைய உணவுப் பொதி ஒன்றின் விலையை 20 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts