பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கும்!

பாண் உட்பட வெதுப்பக உற்பத்திப் பொருட்கள் அனைத்தினதும் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது எனத வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

வெதுப்பக உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பாம் எண்ணெய், மாஜரின், உப்பு, சீனி என்பவற்றின் விலை 20 வீதத்தால் உயர்ந்துள்ளது. இது குறித்து அரசின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம். இதன் பின்னர் விலை அதிகரிப்பது குறித்துத் தீர்மானம் எடுக்கப்படும் என்று கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் தகவல் அளித்துள்ளார்.

Related Posts