அனைத்து பேக்கரி தயாரிப்புக்களினதும் விலைகளையும் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய வரிகள் காரணமாக அனைத்து பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளமையினால் பேக்கரி தயாரிப்புக்களினதும் விலையையும் அதிகரிக்க நேரிட்டுள்ளதாக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்ந்தன குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் பனிஸ் ஒன்றின் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் என்.கே. ஜயவர்ந்தன சுட்டிக்காட்டியுள்ளார் .
தேசிய நிர்மாண வரி அறிவிடப்படுவதன் காரணமாகவே பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி தயாரிப்புகளின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக அவற்றை விற்பனை செய்வதில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் குறிப்பி்ட்டுள்ளது.