பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு!

50 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விலை மாற்றம் இன்று 3ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி நாளைக் காலை தொடக்கம் ஒரு இறாத்தல் பாணின் விலை 65 ரூபா என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

“கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதையடுத்து வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கூடி ஆராய்ந்தது. இந்த நிலையில் பாணின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts