பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு!

கோதுமை மாவிற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டமையால் பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவிக்கையில்,

இடைக்கால அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய வரி திருத்தங்கள் காரணமாக ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாயால் குறைத்து கொள்வதற்கு எமது சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

கோதுமை மாவிற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதன் மூலம் நேரடியாக நாட்டிற்கு அதிகளவில் கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியும்.

பாணின் விலையை குறைக்க முடிந்ததால், ஏனைய பேக்கரி பொருட்களின் விலையையும் குறைப்பது குறித்து பரிசீலனை செய்யவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts