பாணின் விலை குறைகிறது!

பாண் ஒன்றின் விலை இன்று (திங்கட்கிழமை) முதல் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையில் குறைக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தமது நிர்வாக சபை கூடி இறுதி செய்யும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தையில் போதிய அளவில் கிடைப்பதால் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

Related Posts