பாட்ஷா ரீமேக்கில் விஜய்!!!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வசூலில் வரலாறு படைத்த, இன்றும் ஆக்ஷன் க்ளாஸிக் என்று பாராட்டப்படும் பாட்ஷா படத்தை ரீமேக் செய்ய வேண்டும்… அதில் நாம் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாத ஹீரோக்களே இல்லை.

vijay-new

‘ஆசை இருந்தால் போதுமா… நமக்கு செட் ஆகணுமே’ என்று யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அமைதியாக கடந்து போகும் நடிகர்களே அதிகம். ஆனால் நடிகர்கள் சும்மா இருந்தாலும், வாய்ப்புக்காக சில இயக்குநர்கள் தொடர்ந்து அவர்களை உசுப்பேற்றுவது தொடர்கிறது.

இந்த உசுப்பேற்றல் லிஸ்டில் இயக்குநர் தரணியும் இப்போது சேர்ந்துவிட்டார்.

நேற்று முன் தினம் பிறந்த நாள் கொண்டாடிய விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் சாக்கில், ‘பாட்ஷா ரீமேக்கில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும்,’ என்று கூறியுள்ளார்.

விஜய்யை வைத்து ‘கில்லி’ என்ற ஹிட் படத்தையும், இன்றும் பலரும் நக்கலடித்து வரும் ‘குருவி’ என்ற ப்ளாப் படத்தையும் தந்தவர் தரணி.

‘பாட்ஷா படத்தை ரஜினியை வைத்தே மீண்டும் ரீமேக் செய்ய வேண்டும் என முயன்றது அந்தப் படத்தைத் தயாரித்த சத்யா மூவீஸ் நிறுவனம். அதற்கு ரஜினி சொன்ன பதில், ‘வேணாங்க.. நல்லாருக்காது. அந்தப் படத்தை அப்படியே விட்ருங்க..!’

Related Posts