பாட்ஷா ரஜினியாட்டம் போஸ் கொடுக்கும் மொட்டை ராஜேந்திரன்!

சிவகார்த்திகேயனுக்குப்பிறகு விஜய் டிவியில் இருந்து சினிமாவில் ஹீரோவானவர் மா.கா.பா.ஆனந்த். வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார். படமும் ஓரளவு ஓடியதால் அதையடுத்து கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் ஒப்பந்தமானார் மா.கா.பா., ஆனால் பின்னர் அவர் நடிப்பில் வெளியான நவரச திலகம் படம் வெற்றி பெறவில்லை. விளைவு, அவரது நடிப்பில் வேகமாக வளர்ந்து வந்த படங்கள் டல்லடிக்கத் தொடங்கின. இந்நிலையில், அட்டி படம் இம்மாதம் 7-ந்தேதி ரிலீசாகிறது.

அதோடு, நவரச திலகம் ஏமாற்றி விட்டதால் இந்த அட்டி படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார் மா.கா.பா.ஆனந்த். மேலும் இந்த படத்தில் அவர் மட்டுமின்றி மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், அப்படத்தின் போஸ்டர்கள் சென்னை நகர மெங்கும் பெரிய அளவில் ஒட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த போஸ்டரில் ஹீரோ-ஹீரோயினி யாரும் இல்லை. மாறாக மொட்டை ராஜேந்திரன் மட்டுமே பாட்ஷா ரஜினி போன்று போஸ் கொடுக்கிறார். தற்போதைய அவரது மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அவருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களாம்.

Related Posts