பாட்ஷா, கபாலியை மிஞ்சும் ரஜினியின் அடுத்த கேங்ஸ்டர் படம்!

ரஜினியின் கேரியில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் அவர் நடித்த பாட்ஷா முக்கியமான படம். வசூல்ரீதியாக மட்டுமின்றி, ரஜினிக்கும், அவரது ரசிகர் களுக்கும் பெரிய திருப்தியை கொடுத்த படம். அதனால்தான் இப்போது வரை தான் நடித்த படங்களில் பிடித்த முதல் படமாக பாட்ஷாவை குறிப்பிட்டு வருகிறார் ரஜினி. மேலும், அந்த படம் பாணியில் அதன்பிறகு பாட்ஷா-2 படத்தை இயக்க சுரேஷ்கிருஷ்ணா தயாரானபோதும், ரஜினி அதற்கு உடன்படவில்லை. பாட்ஷா மாதிரியான இன்னொரு படம் கொடுப்பது அரிது என்று அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்து விட்டார்.

இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப்பிறகு கபாலி என்ற கேங்ஸ்டர் கதையில் நடித்த ரஜினி மீண்டும், பா.ரஞ்சித் இயக்கத்தில் இன்னொரு படத்திலும் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். தற்போது ஷங்கரின் 2.ஓ படத்தின் இறுதிகட்டத்தில் இருப்பவர் விரைவில் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அப்படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் பாட்ஷா, கபாலி படங்களின் இரண்டாம் பாகங்களாக இருக்கலாம் என்று செய்திகள் கசிந்து வரும் நிலையில், அதுகுறித்து டைரக்டர் ரஞ்சித் தரப்பில் விசாரித்தபோது, ரஜினியை அடுத்து இயக்கும் புதிய படமும் கேங்ஸ்டர் கதையில்தான் உருவாகிறது. 90 சதவிகிதம் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. அதற்கான லொகேசனை முதலில் பார்த்து விட்டு இப்போது ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் ரஞ்சித். முக்கியமாக, பாட்ஷா, கபாலி மாதிரி இல்லாமல் இன்னொரு புதுமாதிரியான கேங்ஸ்டர் கதையில் இந்த படம் தயாராகிறது. பாட்ஷா, கபாலி படங்களுக்கும் இந்த படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இருக்காது. அதேசமயம், அந்த படங்களை மிஞ்சும் வகையில் அதிரடியான கேங்ஸ்டர் கதையில் இப்படம் தயாராகிறது என்கிறார்கள்.

Related Posts