தென்னிலங்கையின் காலி பகுதியில் தனது பாட்டியை நீண்ட நாட்களாக மலசலகூடத்திற்கு அருகில் பாழடைந்த குளியலறையொன்றில் அடைத்து வைத்த பேத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
78 வயதுடைய குறித்த வயோதிபப் பெண்ணிற்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவரது மகளே தனது பாட்டியை அடைத்து வைத்திருந்துள்ளதாகவும் மீட்டியாகொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து வயோதிபப் பெண்ணின் பேத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மற்றுமொரு மகளை அழைப்பை மேற்கொண்டு வரவழைத்த பொலிஸார், தாயை ஒழுங்காக பார்த்துக் கொள்ளவில்லையெனக் கூறி அவரையும் கைது செய்துள்ளனர்.