யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் தாம் விரும்பிய துறைகளில் பாடங்களை கற்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக கலைப்பீட பதில் பீடாதிபதி ப.புஸ்பரட்ணம் தெரிவித்தர்.
கலைப்பீடத்தின் கீழ் இருக்கின்ற புவியியற்துறையின் திட்டமிடல் கற்கை நெறி மற்றும் அரசியல் துறை ஆகிய பாடங்களுக்கு சிறப்புக்கலை மாணவர்களை இணைப்பதில் பல்கலைக்கழக நிர்வாகம் காட்டிவருகின்ற குளறுபடியான செயற்பாடுகளால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து காலவரையறையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்.
மாணவர்களில் பிரச்சினைகள் தொடர்பாக துணைவேந்தருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது சாதகமான பதில் கிடைந்ததை தொடர்ந்து கலைப்பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் தாம் விரும்பிய துறைகளில் கல்வி கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இதேவேளை தூர இடங்களிலிருந்து வரும் மாணவர்களின் நலம் கருதி எதிர்வரும் திங்கட்கிழமை 2,3ம் வருட மாணவர்களுக்கு விரிவுரைகள் ஆரம்பாமாகும் என கலைப்பீட பதில் பீடாதிபதி அறிவித்துள்ளார்.