பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை (9) விடுமுறையாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

காலநிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் கலந்துரையாடிய பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடு முழுவதும் வளிமண்டலம் மோசமாக உள்ளது. மலையக பிரதேசங்களில் பலத்த சூறாவளியுடன் குளிர்ந்த காலநிலையும் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts