பாடசாலை மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கணனி அறிவு குறித்தும் பாடசாலைகளின் கணனி வசதிகள் குறித்தும் ஆராய்வதற்கான மதிப்பீடு ஒன்று நடத்தப்படுவதாகதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் மற்றும் இலங்கை தொலை தொடர்பு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்பன கூட்டாக இணைந்து இந்த மதிப்பீட்டை நடத்துகின்றன. நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இந்த மதிப்பீடு நடைபெறுகிறது.