பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பான உடைகளை அணியலாம்

நாட்டில் டெங்கு நோய் மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பான உடைகளை அணிந்து பாடசாலைக்குச் செல்லலாம் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வியமைச்சு இன்று (புதன்கிழமை) விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டு இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

டெங்கு நுளம்புகள் தம்மை தாக்காதவாறு உடம்பை முழுமையாக மறைக்கும் அல்லது பாதுகாப்பான ஆடைகளை அணியுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு நோய் தாக்கத்தால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 600இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதோடு, அவர்களுள் பாடசாலை மாணவர்களும் கணிசமான அளவு உள்ளடங்கியுள்ளனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் பதுளை மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் டெங்கு தாக்கத்தால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts